ரசிகர்களுக்கு ஸ்ரேயா கொடுத்த ஷாக்..!
தனக்கு குழந்தை பிறந்து ஓராண்டு ஆகிவிட்டதாக நடிகை ஸ்ரேயா இன்ஸ்டாலில் வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார்.
தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல்வேறு மொழி படங்களில் நடித்து பிரபலமான நடிகை ஸ்ரேயா 2018 ஆம் ஆண்டு ரஷ்ய தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்குப் பிறகு படங்களில் நடிப்பதை குறைத்துக் கொண்ட ஸ்ரேயா அவ்வப்போது சமூகவலைத்தளங்களில் ஆக்டிவாக இருந்து வந்தார்.
கணவர் மற்றும் குழந்தைகள் இருக்கும் வீடியோவை வெளியிட்ட ஸ்ரேயா தனக்கு குழந்தை பிறந்து ஓராண்டு ஆனதாக பதிவிட்டு இருந்தது அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.







