--- --:--:-- --

இரண்டு மகன்களை ஏரியில் மூழ்கடித்துக் கொன்றுவிட்டு தற்கொலைக்கு முயன்ற தந்தை..!

10

இரண்டு மகன்களை ஏரியில் மூழ்கடித்துக் கொன்றுவிட்டு தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அடுத்த கொள்ளுமேடு பகுதியை சேர்ந்த கணேசன் தனது மனைவி மாரியம்மாளுக்கு ஆறு வயதில் ஒரு மகன், நான்கு வயது ராகேஷ், ஆகிய இரண்டு மகன்களுடன் வசித்து வந்தார்.

 

கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்த மாரியம்மாள் கடந்த ஓராண்டாக வேறு ஒருவருடன் வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது. ஆவடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் மாரியம்மாள் புகார் அளித்துள்ளார்.

 

தன்னை விட்டுப் பிரிந்து சென்ற மனைவி குழந்தைகளையும் பிரிந்து விடுவாரோ என அச்சம் அடைந்துள்ளார். அந்த மன உளைச்சலில் மகன்கள் இருவரையும் ஏரியில் மூழ்கி கொலை செய்துவிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

 

இருவரின் உடல்களையும் மீட்ட காவல்துறையினர் மயங்கிய நிலையில் இருந்த கணேசனை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon