--- --:--:-- --

தேமுதிக வளரக் கூடாது என நினைக்கும் கட்சிகளை முறியடிப்போம் ..!

4

தேமுதிக வளரக் கூடாது என நினைக்கும் கட்சிகளை முறியடிப்போம் என தேமுதிக கட்சி தலைவர் விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் தெரிவித்துள்ளார். விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் நகர் மற்றும் கிராம பகுதிகளில் உள்ள மக்களுக்கு தேமுதிக கட்சியின் 17 ஆண்டு துவக்கவிழா நடைபெற்றது.

 

இதில் விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் கலந்து கொண்டு பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பின்னர் பேசியவர் தேமுதிக வளரக் கூடாது என சில கட்சிகள் நினைக்கிறது என்றும் அதனை முறியடிப்போம் எனவும் தெரிவித்தார்.

 

மற்ற கூட்டணிக் கட்சிகளுக்கு கொடுக்கும் மரியாதையை தேமுதிகவிற்கு தரவேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார். விருதுநகர் மாவட்டத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இதனை தெரிவித்துள்ளார்.

Right Menu Icon