--- --:--:-- --

பப்ஜி விளையாட்டில் மூழ்கிய கல்லூரி மாணவர் தூக்கிட்டு தற்கொலை..!

5

துரையில் பப்ஜி விளையாட்டில் மூழ்கிய கல்லூரி மாணவர் தொடர் தோல்வியால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சௌந்தரபாண்டி என்பவரின் மகன் மகேந்திரன்.

 

இவர் மதுரையில் உள்ள தனியார் கல்லூரியில் இளங்கலை முடித்துவிட்டு முதுகலை முதலாம் ஆண்டு சேர்ந்து படித்து வந்துள்ளார். இந்நிலையில் மகேந்திரன் அடிக்கடி தனது ஆன்லைன் கேம் ஃப்ரீ பையர், பப்ஜி விளையாடியுள்ளார்.

 

தொடர்ச்சியாக பஜ்ஜி கேம்மிற்கு அடிமை ஆகியுள்ளார். இவரை செல்போன் அதிகம் பயன்படுத்தக்கூடாது என பெற்றோர் கண்டித்துள்ளார். இதனால் மனவேதனை அடைந்த கல்லூரி மாணவன் தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

 

இந்த சம்பவம் குறித்து போலீசார் இறந்தவரின் உடலை மீட்டு பரிசோதனைக்காக உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

Right Menu Icon