--- --:--:-- --

ஐந்தாம் கட்டமாக இன்று நடைபெறும் மெகா தடுப்பூசி முகாம்..!

2

ஐந்தாம் கட்டமாக இன்று மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்படுகின்றன. மொத்தம் 30 ஆயிரம் முகாம்களில் தடுப்பூசி போடப்பட உள்ள நிலையில் இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்த உள்ளவர்களுக்கு இன்று முன்னுரிமை வழங்கப்படும் என மருத்துவத் துறை அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

 

இரண்டாம் தவணை செலுத்த சுமார் 20 லட்சம் பேருக்கு இன்றைய முகாம்களில் தடுப்பூசி போட இருப்பதாக தெரியவந்துள்ளது. தமிழகத்தில் மெகா தடுப்பூசி முகாம் என்ற பெயரில் ஞாயிற்றுக்கிழமைகளில் இதுவரை நான்கு முகாம்கள் நடத்தப்பட்டன.

 

இன்று ஐந்தாவது வகை தடுப்பூசி முகாமுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆரம்ப சுகாதார நிலையங்கள் அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகள், ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள், பூங்காக்கள் மற்றும் முக்கிய இடங்கள் என 30 ஆயிரம் இடங்களில் முகாம் நடைபெற உள்ளது. சென்னையில் மட்டும் 1,600 இடங்களில் கொரொனா தடுப்பூசி செலுத்தப்பட இருக்கிறது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon