--- --:--:-- --

அவிநாசி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ராஜ்ய புரஸ்கார் கவர்னர் விருதுக்கான முன் தேர்வு முகாம்

GYIKYGUT

திருப்பூர் கல்வி மாவட்ட சாரண சாரணியர் இயக்கம் சார்பில் ராஜ்ய புரஸ்கார் என்னும் கவர்னர் விருதுக்கான முன் தேர்வு முகாம் அவிநாசி பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடந்தது.

 

முகாமை திருப்பூர் மாவட்ட சாரண சாரணியர் அமைப்பின் ஒருங்கிணைப்பாளரும், மாவட்ட உதவி ஆணையருமான ராஜாராம் தொடக்கி வைத்தார். துணை செயலாளர் தனசிங் முன்னிலை வகித்தார். முகாமில் சாரணிய உறுதிமொழி மற்றும் சட்டங்கள், பிரார்த்தனை பாடல்கள், கொடிப்பாடல்கள் மற்றும் தேசிய கீதம் குறித்து கேள்வி கேட்க மாணவிகள் பதில் அளித்தனர்.

 

தொடர்ந்து மதியம் லாக் புத்தகம், பல்வேறு பிரிவுகளில் திறமைகளுக்கான பேட்சஸ் குறித்து மாணவிகள் தனியாக எழுதவேண்டியதை சரிபார்க்கப்பட்டது. மேலும், ராஜ்ய புரஸ்கார் விருதுக்கான தேர்வு முகாமின்போது செயல்படுத்தவேண்டியவை குறித்தும் மாணவிகளுக்கு எடுத்து கூறப்பட்டது. மாலை 4 மணி வரை நடந்த முகாமில் பள்ளி சாரணிய ஆசிரியை ருக்குமணி மற்றும் 7 சாரணியர்கள் கலந்து கொண்டனர்.

 

பின்னர் இந்த குழுவினர் திருமுருகன், கிட்ஸ் கிளப் பள்ளி உள்பட 8 பள்ளிகளுக்கு சென்று ஆய்வு செய்தனர். இதேபோல் இம்மாகுலேட் ஆரோக்கியமேரி மற்றும் சுதாலட்சுமி ஆகியோர் கொண்ட குழுவினர் பிஷப், குமரானந்தபுரம் அரசு பள்ளி உள்பட பல்வேறு பள்ளிகளை ஆய்வு செய்தனர். முகாமில் அரசு மற்றும் பல்வேறு தனியார் பள்ளிகளை சேர்ந்த திரளான சாரண சாரணியர்கள் கலந்து கொண்டனர்.

Right Menu Icon