அண்ணாத்த படத்தின் சாரக்காற்றே பாடல் நாளை வெளியாக வாய்ப்பு..!
அண்ணாத்த திரைப்படத்தின் மற்றொரு பாடலான சாரக்காற்றே நாளை மாலை 6 மணிக்கு வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் ரஜினிகாந்த், நயன்தாரா, குஷ்பூ என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே இந்த படத்தில் நடித்துள்ளது.
சிவா இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தின் இறுதிகட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படம் அடுத்த மாதம் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகிறது. இதையடுத்து சில தினங்களுக்கு முன் அண்ணாத்த படத்தில் முதல் பாடல் வெளியிடப்பட்டது.
அது ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. ஷ்ரேயா கோஷல் சித்ஸ்ரீராம் இணைந்து பாடிய பாடல் நாளை வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.






