--- --:--:-- --

திமிங்கல உமிழ்நீரான ஆம்பர் கிரீசை 5 கோடிக்கு விற்க முயன்ற 5 பேர் கைது..!

8

ன்னியாகுமரி மாவட்டத்தில் பல கோடி ரூபாய் மதிப்பில் 5 கிலோ எடை கொண்ட திமிங்கலத்தின் உமிழ்நீரான ஆம்பர் கிரீசை விற்க முயன்ற 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

 

கன்னியாகுமரி மாவட்டத்தில் நேற்று வியாழக்கிழமை மாலை ஒரு கும்பல் தடை செய்யப்பட்ட ஆம்பர் கிரீஸ் பொருளை விற்பனை செய்வதற்கு வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

 

இதனையடுத்து அங்கு விரைந்து சென்ற போலீசார் அங்கிருந்த ஐந்து பேரிடம் விசாரணை நடத்தியுள்ளனர். இதையடுத்து அவர்கள் 5 பேரையும் அவர்கள் வந்த காரையும் காவல்துறையினர் பிடித்தனர்.

 

போலீசார் விசாரணை மேற்கொண்டதில் செங்கல்பட்டை சேர்ந்த வரதராஜன் என்பவர் தனது கூட்டாளிகளுடன் தடைசெய்யப்பட்ட ஆம்பர் கிரீஸ் எனும் பொருளை கொண்டு வந்திருப்பது தெரியவந்தது. இதனையடுத்து வரதராஜன், தென்காசியை சேர்ந்த சுப்பிரமணியன், ராமநாதபுரத்தை சேர்ந்த சுல்தான் உள்ளிட்ட 5 பேரை கைது செய்தனர்.

Right Menu Icon