மலேரியாவுக்கான முதல் தடுப்பூசி அறிமுகம்..!
மலேரியாவுக்கான முதல் தடுப்பூசியை உலக சுகாதார அமைப்பு உலக நாடுகளுக்கு பரிந்துரைத்துள்ளது. ஆப்பிரிக்க நாடுகளான கென்யா, மலாவி ஆகியவற்றில் ஒரு லட்சம் பேரிடம் கடந்த இரண்டு ஆண்டுகளாக நடத்தப்பட்ட சோதனை முடிவுகள் திருப்திகரமாக இருந்தது.
தடுப்பு மருந்தை உலகெங்கும் பயன்படுத்த பரிந்துரை அளிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை வெளியிட்ட உலக சுகாதார அமைப்பின் பொதுச் செயலாளர் டெட்ராஸ் இது வரலாற்று சிறப்புமிக்க தருணம் என குறிப்பிட்டார். உலகின் மிகப்பெரிய உயிர்க்கொல்லி நோய்களில் ஒன்றான மலேரியாவால் பாதிக்கப்படும் நிலையில் 4 லட்சம் பேர் உயிரிழக்கின்றனர்.
இவர்களில் பெரும்பாலானோர் ஆப்பிரிக்க நாடுகளைச் சேர்ந்தவர்களாவர். தற்பொழுது பரிந்துரைக்கப்பட்டுள்ள தடுப்புமருந்து 30 விழுக்காடு மட்டுமே பயனளிக்கும் என ஆய்வுகளில் தெரிய வந்தாலும் பல லட்சம் உயிர்கள் பாதுகாக்கப்படும் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.






