--- --:--:-- --

தாலிபான்களிடம் இருந்து தப்பிக்க போராடும் மக்கள்..!

4

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் பாஸ்போர்ட் அலுவலகம் திறக்கப்பட்ட நிலையில் ஆயிரக்கணக்கான ஆப்கானிய மக்கள் பாஸ்போர்ட் பெறுவதற்காக விண்ணப்பித்து வருகின்றனர்.

 

வெளிநாடுகளுக்கு யாரும் தப்பி செல்ல முயற்சிக்க கூடாது என்று தாலிபான்கள் அறிவித்து வரும் நிலையில் பலர் புதிதாக பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்து உள்ளனர். தங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு உடல் நிலை சரியில்லை என்றும் வெளிநாடுகளில் சிகிச்சைக்குச் செல்ல வேண்டும் என்றும் கூறி பாஸ்போர்ட் பெற்று வருகின்றனர்.

 

அவர்கள் துப்பாக்கி முனையில் மிரட்டியும் தொடர்ந்து அங்கேயே அவர்கள் கால்கடுக்க காத்து இருந்தனர். ஆப்கானிஸ்தானை தலிபான்கள் ஆட்சி செய்துவரும் நிலையில் கடந்த ஒன்றரை மாதத்தில் மட்டும் பெண்களுக்கு எதிராக பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர். இதனால் நாட்டை விட்டு வெளியேற பல்லாயிரம் மக்கள் முயன்று வருகின்றனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon