--- --:--:-- --

வரும் 16ஆம் தேதி ஜெயலலிதா நினைவிடம் செல்கிறார் சசிகலா..!

2

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா நினைவிடத்திற்கு வரும் 16ஆம் தேதி சென்று அவரது தோழி சசிகலா அஞ்சலி செலுத்த உள்ளார். அதிமுகவின் 50ஆவது ஆண்டு தொடக்க விழா வரும் 17-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.

 

இதையொட்டி ஜெயலலிதா நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்த உள்ளதாக சசிகலா தெரிவித்துள்ளார். சசிகலா சிறையில் இருந்து வெளியே வந்த பின் ஜெயலலிதாநினைவிடத்திற்கு செல்வது இதுவே முதன்முறையாகும்.

 

தமிழ்நாட்டு அரசியலில் இருந்து ஒதுங்கி இருப்பதாக சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன் அறிவித்த சசிகலா பின்னர் தன் நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டு அரசியலுக்கு வருவது குறித்து ஆதரவாளர்களிடம் தொலைபேசியில் பேசி வந்தார்.

 

இந்த நிலையில் ஜெயலலிதா சசிகலா செல்ல உள்ளார். இதைத் தொடர்ந்து சென்னை ராமபுரத்தில் உள்ள எம்ஜிஆர் இல்லத்திற்கு சென்று அவரது சிலைக்கு சசிகலா மரியாதை செலுத்துவார் என கூறப்படுகிறது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon