--- --:--:-- --

குடிநீருடன் கழிவுநீர் கலந்ததால் 5 பேர் உயிரிழப்பு..! 200 பேர் மருத்துவமனையில் அனுமதி..!

4

கர்நாடக மாநிலத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட விஜயநகர் மாவட்டத்தில் குடிநீருடன் கழிவுநீர் கலந்த காரணத்தால் ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர் 200க்கும்அதிகமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

 

விஷத்தன்மை இருந்த தண்ணீரை குடித்த கிராம மக்கள் இந்த நிலைமைக்கு ஆளாகி உள்ளனர். பெல்லாரி மற்றும் தாவணிகரை ஆகிய இடங்களில் அமைந்துள்ள மருத்துவமனையில் அவர்கள் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 

கழிவுநீர் கலந்த குடிநீரால் 5 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் அந்த மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon