--- --:--:-- --

முதலமைச்சர் குறித்து அவதூறாக பேசிய நபர் கைது..!

8

சூர் அருகே தமிழக முதலமைச்சர் குறித்து அவதூறாக பேசி சாதி வன்முறையை தூண்டும் வகையிலும் பேசி சமூக வலைதளங்களில் வீடியோ வெளியிட்டு வருபவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

 

ஓசூரை சேர்ந்த முருகன் என்பவர் தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலினையும் அவரது குடும்பத்தினரை பற்றியும் அவதூறாக பேசி வீடியோ ஒன்றை வாட்ஸ் அப்பில் பதிவேற்றியுள்ளார். மேலும் ஒரு குறிப்பிட்ட சாதி உயர்வு எனவும் மற்றொரு சாதியில் இழிவு எனவும் சாதி வன்முறையை தூண்டும் வகையில் அவர் பேசியுள்ளார்.

 

அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இது தொடர்பாக முருகனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Right Menu Icon