இரண்டாவது கொரொனா தடுப்பூசியை செலுத்திக் கொண்ட கர்ப்பிணி பெண் உயிரிழப்பு..!
திருவள்ளூர் அருகே இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்டு 9 மாத கர்ப்பிணி பெண் மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்திருக்கிறார். திருவள்ளூர் அடுத்த புதூர் பகுதியில் வசித்து வரும் லாவண்யா 9மாத நிறைமாத கர்ப்பிணியாக இருந்திருக்கிறார்.
இந்த நிலையில் கொரொனா தடுப்பூசி முகாமில் தடுப்பூசி செலுத்திக்கொண்டு லாவண்யாவுக்கு அன்று இரவே மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது. அருகே இருந்த ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து சென்ற பொழுது அங்கு அவருக்கு மேலும் ஒரு ஊசி போடப்பட்டு உள்ளது.
வீடு திரும்பிய லாவண்யாவுக்கு மீண்டும் மூச்சுத்திணறல் ஏற்படவே மருத்துவமனையில் கொண்டு செல்லும் வழியில் லாவண்யா உயிரிழந்தார். இதையடுத்து இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி மாவட்ட ஆட்சியர்கள் அலுவலகத்தை முற்றுகையிட்டு அவரது உறவினர்கள் உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.






