--- --:--:-- --

உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் அக்.4ம் தேதிக்கு தள்ளிவைப்பு

6

புதுச்சேரியில் உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் தொடங்குவதை அக்டோபர் 4-ம் தேதிக்கு தள்ளி வைக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. புதுச்சேரியில் உள்ள நகராட்சிகள், 10 பஞ்சாயத்துகளுக்கு தேர்தல் நடத்துவது தொடர்பாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

 

இந்த தேர்தலில் பட்டியல் இனத்தவர்களுக்கு முறையான ஒதுக்கீடு வழங்கப்படவில்லை என்றும் எனவே இந்த அறிவிப்புக்கு தடை விதிக்க கோரியும் சுயச்சை சட்டப்பேரவை உறுப்பினர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

 

இந்த மனு விசாரணைக்கு வந்தபோது பட்டியல் இனத்தவர் அதிகம் வசிக்கும் வார்டுகளை அவர்களுக்கு ஒதுக்காமல் குறைந்த எண்ணிக்கையில் வசிக்கும் வார்டுகளை ஒதுக்கியுள்ளதாக மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.

 

இதைக்கேட்ட நீதிபதிகள் அமர்வு இந்த தவறுகளை சரி செய்யாமல் தேர்தலை நடத்த முடியாது என கூறியதுடன் வேட்புமனு தாக்கல் தொடக்கம் தேதி அக்டோபர் 4-ம் தேதிக்கு தள்ளி வைக்க உத்தரவிட்டது. மேலும் மனுவுக்கு பதிலளிக்கும்படி புதுச்சேரி அரசுக்கும் தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டு விசாரணை தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon