12 ஆம் வகுப்பு பயிலும் ஆறு மாணவிகளுக்கு கொரொனா தொற்று..!
பெரம்பலூரில் அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளியில் 12 ஆம் வகுப்பு பயிலும் ஆறு மாணவிகளுக்கு கொரொனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
புனித தோனிக் பெண்கள் மேல்நிலை பள்ளியில் 12 ஆம் வகுப்பு மாணவி ஒருவருக்கு தொற்று கண்டறியப்பட்ட நிலையில் சக மாணவிகளுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 5 மாணவர்களுக்கு தொற்று உறுதியாகியுள்ளது.
இதனையடுத்து அந்த பள்ளிக்கு ஐந்து நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டு பள்ளி வளாகம் மற்றும் வகுப்பறைகளில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு உள்ளது.






