--- --:--:-- --

தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது இடிந்து விழுந்த மேற்கூரை ..!

5

கடையநல்லூர் அருகே உள்ள சிங்கிலிபட்டி கிராமத்தில் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். தென்காசி மாவட்டம் செங்கிப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் மாரிதுரை.

 

இவர் கூலி வேலை பார்த்து வருகிறார். இவர் தனது மனைவியுடன் வீட்டில் தூங்கியுள்ளார். அப்போது வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்தது. சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வந்தனர். மேற்கூரை விழுந்ததில் மனைவி வெள்ளாத்தா உயிரிழந்தார்.

 

சிக்கி இருந்த மாரிதுரையை மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon