சாலையோரம் ரோஜாக்களை கொட்டி செல்லும் விவசாயிகள்..!
கர்நாடகாவில் ரோஜா பூக்களின் விலை வீழ்ச்சியால் விவசாயிகள் சாலையோரத்தில் ரோஜா பூக்களை கொட்டியுள்ளனர். கர்நாடக மாநிலத்தின் பிலாஸ்பூர் மாவட்டத்தில் ஏராளமான விவசாயிகள் ரோஜா செடிகளை வளர்த்து வருகின்றனர்.
இந்நிலையில் சிக்பல்லாபூர் மாவட்டத்தில்ரோஜா மற்றும் செண்டுமல்லி பூக்களின் விலை கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ளது. அங்கு ஒரு கிலோ ரோஜா பூ ஐந்து ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதில் ரோஜா பூக்களின் விலை வீழ்ச்சி அடைந்ததால் பாதிக்கப்பட்ட விவசாயி ஒருவர் ரோஜா பூக்களை சேகரித்து சென்று புறநகர் பகுதியில் சாலையோரம் கொட்டி அழித்தார். இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ரோஜா பூக்களை பயிரிட்டு பாதிக்கப்பட்ட விவசாயிகள் தங்களுக்கு அரசு தக்க நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்






