--- --:--:-- --

தோஷம் கழிப்பதாக கூறி நகை மோசடி செய்த பெண்..!

5

நாகர்கோவிலில் தோஷம் கழிப்பதாக கூறி நகை மோசடி செய்த பெண்ணை போலீசார் கைது செய்தனர். நாகர்கோவிலை சேர்ந்தவர் கஸ்தூரிராஜா. இவருடைய மனைவி சுஜிதா. இவருடன் கிரிஜாவுடன் சுஜிதா என்ற பெண் அறிமுகமாகியுள்ளார்.

 

அப்பொழுது சுஜிதா தன்னை சாமியார் என கூறியுள்ளார். இதனிடையே தன்னுடைய மகளுக்கு திருமணம் நடைபெறுவதாக சுஜிதாவிடம் கிரிஜா கூறியுள்ளார். அவர்களுக்கு மாங்கல்ய தோஷம் இருப்பதாகவும் உடனே அதற்கு பரிகாரம் செய்ய வேண்டும் எனக் கூறியுள்ளார்.

 

பின்னர் வீட்டிலுள்ள நகை எல்லாம் கொண்டுவந்து வைக்குமாறு கூறவே கிரிஜாவும் அதனை செய்துள்ளார். இப்படியாக கடந்த 8 மாதங்களில் 22 சவரன் நகைகளை எடுத்துக் கொண்டு அதற்கு பதிலாக கவரிங் நகைகளை கொடுத்து ஏமாற்றியுள்ளார்.

 

இதுகுறித்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் கைது செய்துள்ளனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon