--- --:--:-- --

உதயநிதியை குரங்கு எனக்கூறிய இ‌பி‌எஸ்..!

3

திமுக அரசின் அமைச்சரவையில் இயங்கும் 8 பேர் அதிமுகவில் இருந்து சென்றவர்கள் என அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

 

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகளுடன் கலந்தாய்வு கூட்டம் வாலாஜாபாத்தில் நடைபெற்றது.

 

இதில் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் அமைச்சர் கே சி வீரமணி எஸ் பி வேலுமணி, உடுமலை ராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர். அப்போது பேசிய எடப்பாடி பழனிசாமி, திமுகவில் முதலில் கருணாநிதி இருந்தார். அடுத்து ஸ்டாலின் வந்தார்.

 

தற்போது குரங்கின் வயிற்றில் குட்டி தாவி வருவது போல உதயநிதி வந்துள்ளார் எனவும் கூறியுள்ளார். திமுகவில் ஆள் இல்லாததால் வாடகைக்கு எடுத்து கட்சி நடத்துகிறார்கள் அதிமுகவை சேர்ந்த 8 பேர் திமுகவில் தற்போது அமைச்சர்களாக இருக்கிறார்கள் என்றார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon