சத்துணவு அரிசியில் பிளாஸ்டிக் அரிசி கலப்படம் என புகார்..!
ஓசூர் பள்ளி மாணவர்களுக்கு சத்துணவு அரிசியில் பிளாஸ்டிக் அரிசி கலப்படம் என புகார் வந்ததையடுத்து பெற்றோர் நடுநிலைப் பள்ளியை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
ஓசூர் அடுத்த தேன்கனிக்கோட்டை தாலுகாவில் ஐகார பள்ளியில் ஜெய் கார பள்ளி நடுநிலைப் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. அங்கு மாணவர்களுக்கு வழங்கப்பட்ட அரிசி வழக்கத்தை விட வேறுபட்டு காணப்படுவதாகவும் தண்ணீர்விட்டுக் கழுவும்போது பிளாஸ்டிக் ஒட்டிக் கொள்வதாகவும் கூறப்பட்டது.
இந்த அரிசியை சமைத்து சாப்பிட்ட மாணவருக்கு வயிற்றுப் போக்கு மற்றும் வயிற்று வலி ஏற்பட்டு உள்ளது. அதை தொடர்ந்து அந்த பகுதியில் உள்ள மாணவர்களின் பெற்றோர்கள் பள்ளியை முற்றுகையிட்டு சத்துணவு அமைப்பாளர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் சுமார் 2 மணி நேரம் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.






