--- --:--:-- --

கிணற்றில் தவறி விழுந்த சேவலை காப்பாற்ற சென்ற இளைஞர் 100 அடி ஆழத்தில் சிக்கினார்..!

9

கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள ஒத்தகுதிரை பகுதியை சேர்ந்தவர் கோகுல். இவர் வளர்த்து வந்த 7000 ரூபாய் மதிப்பிலான பந்தய சேவல் ஒன்று அவரது தோட்டத்தில் உள்ள கிணற்றில் தவறி விழுந்தது.

 

அதனை மீட்பதற்காக 100 அடி ஆழமுள்ள கிணற்றில் இறங்கிய கோகுல் கிணற்றில் இருந்து வெளியேற முடியாமல் தவித்துள்ளார். அருகிலிருந்தவர்கள் முயன்றும் முடியாததால் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

 

இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த கோபிசெட்டிபாளையம் தீயணைப்பு துறையினர் அரை மணி நேரத்தில் கோகுலை மீட்டுள்ளனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon