பிரபல எழுத்தாளரான பிரான்சிஸ் கிருபா சென்னையில் காலமானார்..!
பிரபல எழுத்தாளரும் கவிஞருமான பிரான்சிஸ் கிருபா சென்னையில் காலமானார். திருநெல்வேலி மாவட்டம் பத்திர பாதையை சேர்ந்த பிரான்சிஸ் கிருபா நவீன இலக்கியத்தில் எளிய தமிழ் சமுதாயத்தில் எளிய மனிதர்களின் எளிய வாழ்வியலை தனது எழுத்துக்களில் எழுதி புகழ்பெற்றவர் பிரான்சிஸ் கிருபா.
மல்லிகைக் கிழமைகள், வால்நட்சத்திரம் உள்ளிட்ட கவிதை தொகுப்புகளை எழுதியுள்ளார். வெண்ணிலா கபடி குழு, அழகர் சாமியின் குதிரை, ராட்டினம், குரங்கு பொம்மை உள்ளிட்ட பல படங்களுக்கும் பாடல்கள் எழுதியுள்ளார்.
உடல் நலக்குறைவு காரணமாக சென்னையில் நேற்று இரவு பிரான்சிஸ் கிருபா காலமானார். சமூக வலைதளங்களில் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.






