திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில் வரும் 20ஆம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம்..!
மத்திய அரசுக்கு எதிராக திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில் வரும் 20ஆம் தேதி மாநிலம் தழுவிய கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
தலைவர் சோனியா காந்தி தலைமையில் கடந்த மாதம் நடைபெற்ற எதிர் கட்சி கூட்டத்தில் மத்திய அரசுக்கு எதிராக தொடர் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்யப்பட்டது.
அதன்படி பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து இந்த மாதம் 20ஆம் தேதி முதல் 30-ஆம் தேதி வரை நாடு முழுவதும் பல்வேறு கட்ட போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதில் மத்திய அரசுக்கு எதிராக திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் சார்பில் வரும் 20ஆம் தேதி மாநிலம் தழுவிய கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.






