பிரியாணி கடையில் 45 கிலோ கெட்டுப்போன இறைச்சி..! தரமற்ற ஹோட்டல்..!
சென்னை வேளச்சேரியில் செயல்படும் பிரியாணி கடையில் 45 கிலோ கெட்டுப்போன இறைச்சி பறிமுதல் செய்யப்பட்டதை அடுத்து அந்த உணவகத்தை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் மூடினர்.
வேளச்சேரி பிரதான சாலையில் செயல்பட்டு வரும் காரைக்குடி பிரியாணி பிரதர்ஸ் உணவகத்தில் காஞ்சிபுரம் மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி அனுராதா திடீர் ஆய்வு மேற்கொண்டார். ஆனால் இறைச்சி மற்றும் சுகாதாரமற்ற உணவு விற்பதை கண்டுபிடித்து அதிகாரி உரிமையாளரிடம் விசாரணை நடத்தினார்.
விசாரணையில் 45 கிலோ கெட்டுப்போன இறைச்சி மற்றும் சுகாதாரமற்ற உணவுகள் இருப்பதைப் பதிவு செய்து ஏழு நாட்களுக்குள் உணவகத்தை சீர்படுத்தி தகவல் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் அதுவரை உணவகத்தை திறக்க கூடாது எனவும் உத்தரவிட்டார்.
முன்னதாக திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே பிரபல ஹோட்டலில் சிக்கன் உள்ளிட்ட உணவுகளை சாப்பிட்ட ஒருவர் உயிரிழந்தார். பலருக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.






