தலை துண்டிக்கப்பட்ட நிலையில் ஒருவர் படுகொலை..!
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே பழிதீர்க்கும் விதமாக இளைஞர் ஒருவர் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுராந்தகத்தை சேர்ந்த இளைஞரை அவரது வீட்டு மொட்டை மாடியில் வைத்து மர்ம நபர்கள் தலையை துண்டித்து கொலை செய்துள்ளனர். தலையை மட்டும் கடந்த சில நாட்களுக்கு முன்பு படுகொலை செய்யப்பட்ட பகுதியில் வைத்து சென்றிருக்கின்றனர்.
அவர் கொலை செய்யப்பட்டாரா என்பது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.






