பாலியல் தொழில் செய்ய வற்புறுத்துவதாக கணவர் மீது துணை நடிகை புகார்..!
திருமணம் செய்து கொண்ட பின்னர் பணத்திற்காக பாலியல் தொழில் செய்ய வற்புறுத்துவதாக கணவர் மீது துணை நடிகை புகார் அளித்துள்ளார். பெங்களூருவை சேர்ந்த ஐஸ்வர்யா கடலூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
அந்த புகாரில் 2 தமிழ் படங்களில் நடன காட்சிகளில் தான் நடித்து இருப்பதாக தெரிவித்துள்ளார். மேலும் சிங்கப்பூரில் பணிபுரிந்தபோது கடலூர் மாவட்டத்தை சேர்ந்த அருண் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டதாக கூறியுள்ளார்.
திருமணத்தின் போது 8 லட்சம் ரூபாயை வரதட்சணையாக பெற்றுக் கொண்டவர் தற்போது மீண்டும் வரதட்சணை கேட்டு சித்திரவதை செய்வதாக குறிப்பிட்டுள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





