--- --:--:-- --

6 முதல் 8 ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்கான வகுப்புகள் திறப்பு குறித்து ஆலோசனை..!

1

கொரொனா பரவல் காரணமாக கடந்த 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் பள்ளிகள் மூடப்பட்டன. ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் 2019 – 2020 ஆம் ஆண்டு கல்வியாண்டில் ஆல் பாஸ் செய்யப்பட்டனர்.

 

பிளஸ் 1, பிளஸ் டூ மாணவர்கள் மட்டுமே தேர்வு எழுதினர். ஆனால் கொரோணா இரண்டாவது அலை வீரியத்துடன் தாக்கியதை அடுத்து அனைத்து மாணவர்களும் ஆல் பாஸ் என்று அறிவிக்கப்பட்டது.

 

பின்னர் கொரொனா தொற்றின் வேகம் கட்டுக்குள் வந்ததை தொடர்ந்து 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடந்து வருகின்றன. இதனையடுத்து 50 விழுக்காடு மாணவர்களுக்கு மட்டுமே அனுமதி சுழற்சி முறையிலான வகுப்புகள் தனிமனித இடைவெளி, பரிசோதனை என பல்வேறு சுகாதார கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு மாணவர்கள் வகுப்புகளுக்கு வரவழைக்கப்பட்டுள்ளனர்.

 

தொடக்கக் கல்வி, நடுநிலைப் பள்ளிகள் திறப்பது குறித்து முதன்மைக் கல்வி அலுவலர்களுடன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆலோசனை மேற்கொண்டார். ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரை முதலில் பள்ளிகளை திறக்கலாமா அளவு ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை பள்ளிகளை திறக்கலாமா என்பது பற்றி ஆலோசித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இதனை தொடர்ந்து தமிழ்நாட்டில் உள்ள தொடக்கப் பள்ளிகள் மற்றும் நடுநிலைப் பள்ளிகள் திறப்பது குறித்து முதல்வரிடம் சென்று அறிக்கையாக சமர்ப்பிக்கிறார். அதனடிப்படையில் பள்ளிகள் திறப்பு குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் முடிவெடுத்து அறிவிக்க உள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon