--- --:--:-- --

சிறுவன் குடித்த குளிர்பானத்தில் பல்லி இருந்ததால் அதிர்ச்சி..!

2

திண்டுக்கல்லில் பல்லி இறந்து கிடந்த குளிர்பானத்தை குடித்த சிறுவன் மயங்கி விழுந்ததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். திண்டுக்கல்லைச் சேர்ந்தவர் தினேஷ். இவரது மகன் அதே பகுதியில் உள்ள பலசரக்குக் கடையில் குளிர்பானம் வாங்கிக் குடித்துள்ளார்.

 

அப்பொழுது குளிர்பான பாட்டிலில் பல்லி இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார் .இதனை தொடர்ந்து குளிர்பானத்தை குடித்த சிறுவன் மயங்கி விழுந்ததால் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

 

சம்பந்தப்பட்ட குளிர்பான நிறுவனம் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சிறுவனின் பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon