--- --:--:-- --

ஏ.ஆர்.ரகுமான் மீசை வைத்திருக்கும் புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரல்..!

8

இசைப்புயல் ஏ ஆர் ரகுமான் திடீரென மீசை வைத்திருக்கும் புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தை ஏ.ஆர் ரகுமான் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

 

எப்போதும் மீசையின்றி வட இந்தியர் போல் தோற்றமளிக்கும் இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் திடீரென மீசையை வளர்த்து இருப்பது பலரது புருவங்களை உயர்த்த வைத்துள்ளது. எதற்காக மீசை வைத்துள்ளார் எனும் கேள்வியையும் எழுப்பியுள்ளது.

 

இந்த தோற்றத்தில் கலந்துகொண்ட ஏ ஆர் ரகுமான் பற்றி என்ன நினைக்கிறீர்கள் என கேட்டதற்கு மீசை வேண்டாம் சார் எப்பொழுதும் இளமையுடன் இருந்தால் போதும் சார், மீசைக்கார நண்பா உனக்கு ரோசம் அதிகம்டா, தமிழ்நாட்டு பையன் மாதிரி இருக்கீங்க, என்ன ஒரு மாற்றம் என்றெல்லாம் ரசிகர்கள் பதில் அளித்துள்ளனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon