நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு..!
நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட்டுகளை தேசிய தேர்வு முகமை இணையதளத்தில் வெளியிட்டது. மருத்துவப் படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வுக்கான விண்ணப்ப பதிவு கடந்த ஜூலை 13ஆம் தேதி தொடங்கி கடந்த மாதம் பத்தாம் தேதி முடிவுற்றது.
சுமார் 16 லட்சம் மாணவர்களின் விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டதாகக் கூறப்படும் நிலையில் 198 நகரங்களில் இந்த ஆண்டு நீட் தேர்வுகள் நடைபெற உள்ளன. அதன்படி செப்டம்பர் 12ஆம் தேதி நடைபெற உள்ள இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டது.
neet.nta.nic.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது. இதேபோல் செப்டம்பர் 11 ஆம் தேதி நடைபெறவிருக்கும் முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு ஹால் டிக்கெட்டை nbe.edu.in என்ற இணையதளத்தில் பெற்றுக் கொள்ளலாம்.






