--- --:--:-- --

மின் உற்பத்தியை மேம்படுத்த புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது..!

1

தமிழ்நாட்டில் மின் உற்பத்தி திறனை மேம்படுத்தவும் புதிய திட்டங்கள் மற்றும் நவீன தொழில்நுட்ப முறைகளை கையாள்வது தொடர்பாகவும் தமிழ்நாடு மின்வாரியத்திற்கும், இந்திய மரபு சாரா எரிசக்தி நிறுவனத்திற்கும் இடையே முதலமைச்சர் மு க ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தாகி இருக்கிறது.

 

தமிழ் நாட்டின் மின் தேவையை பூர்த்தி செய்வதற்கும், மின் செலவை குறைப்பதற்கும் அடுத்த 10 ஆண்டுகளில் குறைந்தபட்சம் 20 ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி செய்ய தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் திட்டமிட்டு வருகிறது.

 

அதற்கான திட்டங்களை செயல்படுத்துவதற்கு ஒரு லட்சத்து 32 ஆயிரத்து 500 கோடி ரூபாய் நிதி தேவைப்படும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின்பகிர்மான கழகத்திற்கும் இந்திய மரபுசாரா எரிசக்தி மேம்பாட்டு நிறுவனத்திற்கும் இடையே தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

 

இந்த ஒப்பந்தத்தின்படி இந்திய மரபுசாரா எரிசக்தி மேம்பாட்டு நிறுவனம், மரபுசாரா எரிசக்தி துறையில் திறன் படைத்த நிறுவனங்கள் கையாள அந்த இடத்தை ஆய்வு செய்து ஆலோசனை வழங்கும்.

 

மேலும் சந்தை ஆய்வு, ஒப்பந்தப்புள்ளிகள் மேலாண்மை மற்றும் அமலாக்கம் தொடர்பான ஆலோசனைகளையும் வழங்கும்.

 

சென்னை தலைமை செயலகத்தில் நடந்த இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு மின் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி, எரிசக்தி துறை முதன்மை செயலாளர் தர்மேந்திர பிரதாப் யாதவ், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக தலைவர் ராஜேஷ் லக்கானி உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon