--- --:--:-- --

6 மாத கர்ப்பிணியான போலீஸ் அதிகாரியை சுட்டுக் கொன்ற தாலிபன்..!

1

ஆப்கானிஸ்தானில் 6 மாத கர்ப்பிணியான போலீஸ் அதிகாரி பானுவை அவரது குடும்பத்தார் கண்முன்னேயே தாலிபன்கள் சுட்டுக் கொன்றதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

இந்த சம்பவத்தில் ஆப்கன் காவல்துறையில் பணிபுரியும் பெண்மணியை அவரது குழந்தை மற்றும் கணவர் கண்முன்னேயே தாலிபன்கள் சுட்டுக் கொன்றதாக கூறப்படுகிறது. பெண்களின் உரிமைகள் பாதுகாக்கப்படும் என்று தாலிபன்கள் உறுதி அளித்த நிலையில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

 

இந்த நிலையில் அந்த கர்ப்பிணியை போலீஸ் அதிகாரிகள் கொல்லவில்லை என்றும் சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் தகவல் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon