--- --:--:-- --

நிபா வைரசால் உயிரிழந்த சிறுவனின் வீட்டிற்குச் சென்ற மத்தியக் குழு..!

8

கேரள மாநிலத்தில் நிபா வைரசால் உயிரிழந்த சிறுவனின்  வீட்டில் மத்திய குழுவினர் ஆய்வு நடத்தினார். கோழிக்கோட்டை சேர்ந்த 12 வயது சிறுவன் நிபா வைரசால் உயிரிழந்துள்ளான். மத்திய சுகாதாரத் துறையின் உயர்மட்ட குழுவினர் கேரளா சென்றுள்ளனர்.

 

சிறுவனின் வீட்டை பார்வையிட குழுவினர் அங்குள்ள பழங்களின் மாதிரியை சேகரித்தனர். மேலும் சிறுவன் உட்கொண்ட உணவு, அங்குள்ள விலங்குகள் குறித்து குடும்பத்தினரிடம் விசாரணை மேற்கொண்டனர் என்பது குறித்த அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக சுகாதார உறுப்பினர்களுக்கு தெரிவிக்க வேண்டும் என மத்திய குழு அறிவித்துள்ளது.

 

அந்த பகுதியில் உள்ள வீடுகள் மற்றும் சுற்றுப்புறங்களில் பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள் குறித்து உள்ளூர் மக்களுக்கு சுகாதாரத்துறையினர் எடுத்துரைத்துள்ளனர். மலப்புறம், கண்ணூர் மாவட்டங்களில் மத்திய குழுவினர் விழிப்புணர்வு ஏற்படுத்தி உள்ளனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon