--- --:--:-- --

தமிழ்நாட்டில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு..!

3

தமிழ்நாட்டில் கோயம்புத்தூர், சேலம், கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

 

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக நீலகிரி மாவட்டத்தின் ஓரிரு இடங்களில் கனமழை, கடலோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை மையம் குறிப்பிட்டுள்ளது.

 

சென்னையை பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் நகரின் ஒரு சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon