முதல்முறையாக இன்று நீர்வளத் துறை மீதான மானியக் கோரிக்கை விவாதம்..!
தமிழ்நாடு சட்டமன்றத்தில் முதன்முறையாக நீர்வளத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் இன்று நடைபெற உள்ளது. சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெற்ற மு க ஸ்டாலின் தலைமையில் ஆட்சி அமைந்த பிறகு பொதுப்பணித் துறையில் இருந்து நீர்வளத்துறை தனியாக பிரிக்கப்பட்டது.
அந்தத் துறையின் அமைச்சராக துரைமுருகன் நியமிக்கப்பட்டார். அணைகள், ஆறுகள், ஏரி, குளங்கள் மற்றும் நீர் ஆதாரத்தை பெறுவதற்கான பணிகள் நீர்வளத் துறையின் கீழ் வருகின்றன. இந்த நிலையில் முதன்முறையாக அந்தத் துறையில் சட்டமன்றத்தில் இன்று விவாதிக்கப்பட உள்ளது.
உறுப்பினர்களின் பேச்சைத் தொடர்ந்து சில முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டு முதல்வர் முக ஸ்டாலின் பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கோடநாடு விவகாரத்தில் 12 நாட்களாக பேரவை கூட்டத்தை புறக்கணித்த நிலையில் இன்று அந்த கட்சி எம்எல்ஏக்கள் கூட்டத்தில் பங்கேற்பார்கள் என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.






