--- --:--:-- --

இன்று முதல் அமலாகும் புதிய தளர்வுகள் என்னென்ன..?

1

தமிழகத்தில் மேலும் 2 வாரங்களுக்கு நீட்டிக்கப்பட்ட ஊரடங்கு இன்று முதல் அமலுக்கு வந்தது. செப்டம்பர் 6ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் மாதம் இறுதியில் மூடப்பட்ட திரையரங்குகள் இன்று முதல் 50 சதவீத பார்வையாளர்களுடன் திறக்கப்படுகிறது.

 

ஐடி நிறுவனங்கள் 100 சதவீத ஊழியர்களுடன் செயல்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. செயல்பட அனுமதிக்கப்பட்ட அனைத்து நிறுவனங்களில் பணியாளர்களும் தடுப்பூசி செலுத்தியிருப்பது தொடர்புடையதை நிறுவனங்கள் உறுதி செய்யவேண்டும்.

 

நீச்சல் குளங்கள், விளையாட்டு பயிற்சிகளுக்கு மட்டும் 50 சதவீத பயிற்சியாளர்களுடன் செயல்படவும், கடற்கரைகளில் பொதுமக்கள் அளிக்கப்பட்டுள்ளது. உயிரியல் பூங்கா, தாவரவியல் பூங்கா, படகு இல்லம் கடை திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

 

தங்கும் விடுதிகள் மற்றும் கேளிக்கை விடுதிகளில் உள்ள மதுக் கூடங்கள் செயல்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இரவு 9 மணி வரை மட்டுமே செயல்பட்டு வந்த கடைகள் இன்று முதல் இரவு 10 மணி வரை செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

 

தமிழகத்தில் இருந்து கர்நாடகா, ஆந்திர மாநிலங்களுக்கு பொதுப் போக்குவரத்துக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது. மழலையர் காப்பகம் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. சென்னையில் இன்று முதல் மெட்ரோ ரயில்களின் சேவை நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

 

வார நாட்களில் காலை 5.30 மணி முதல் இரவு 11 மணி வரை மெட்ரோ ரயில் இயக்கப்படும் என்றும் ஞாயிறு மற்றும் அரசு பொது விடுமுறை நாட்களில் காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரையிலும் மெட்ரோ ரயில் சேவை நீட்டிக்கப்பட்டுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon