தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு..!
வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்துள்ளது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்த நிலையில் பரமக்குடி சுற்றுவட்டார பகுதிகளில் மழை பெய்தது. பரமக்குடி கமுதி அருகே உள்ள இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்தது.
இரண்டு மணி நேரத்திற்கு மேலும் பெய்த மழையால் வெப்பம் தணிந்து தர்மபுரி மாவட்டத்தில் தர்மபுரி நகரம், பெண்ணாகரம், ஏரியூர் சுற்றுவட்டார பகுதிகளில் மழை பெய்தது. ஒரு மணி நேரம் கனமழையும் அதை தொடர்ந்து 4 மணி நேரமாக சாரல் மழையும் பெய்துள்ளது இந்த பகுதிகளில் கொடுமை நிலவியுள்ளது.







