ஆயிரம் பேரை பிளாக் செய்த நடிகை நேகா..!
திரைத்துறையில் நடிகைகளுக்கு மட்டும் தொடர்ந்து வரும் சோதனையால் சின்னத்திரை நடிகை ஒருவர் 8 ஆயிரம் பேரை பிளாக் செய்ததாக குறிப்பிட்டுள்ளார்.
சினிமாத்துறையில் பொதுவாகவே வயது விஷயத்திலும், உருவ ரீதியாகவும் நடிகர்களைவிட நடிகைகளே அதிகம் கேலி செய்யப்படுவர்.
50 வயதில் ஹீரோவாக நடிப்பவருக்கு 20 வயதில் கட்டாய ஹீரோயினை தேர்வு செய்வதில் தொடங்கி கொஞ்சம் பருமனுடன் இருந்தால் நாயகி ஆசையோடு வருபவர்களையும் காமெடியன்கள் ஆக மாற்றும் போக்கு திரைத்துறையின் வெகு காலமாக இருந்து வருகிறது.
சின்னத்திரையிலும் இந்த போக்கு தொடரும் நிலையில் நடிகை நேகா இது குறித்து மனம் திறந்துள்ளார். பாண்டியன் ஸ்டோர், பாக்கியலட்சுமி தொடர்களில் நடித்தவர் நேகா.
பருமனாக இருப்பதாக கேலி செய்யப்பட்டதால் கொஞ்சம் மன அழுத்தத்திற்கு ஆளானதாகவும் இதனால் எட்டாயிரம் பேர் வரை தனது இணையப்பக்கத்தில் பிளாக் செய்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.







