--- --:--:-- --

சுதந்திர தினத்தன்று கிராமசபை கூட்டங்களை நடத்த தமிழக அரசு தடை..!

11

கொரொனா அச்சுறுத்தல் இருப்பதால் சுதந்திர தினத்தன்று கிராமசபை கூட்டங்களை நடத்த தமிழக அரசு தடை விதித்துள்ளது, ஆண்டுதோறும் சுதந்திர தினத்தன்று கிராமசபை கூட்டம் நடைபெறுவது வழக்கம்.

 

முக்கியமான பிரச்சினைகள் குறித்து மக்கள் கூடி விவாதித்து தீர்மானங்கள் நிறைவேற்றினர். இந்த நிலையில் இந்த ஆண்டும் கொரொனா நீடிப்பதால் ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர தினத்தன்று கிராமசபை கூட்டங்கள் நடத்த தமிழக அரசு தடை விதித்துள்ளது.

 

இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர்களுக்கு ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை இயக்குனர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். கிராமசபை கூட்டங்கள் நடத்த வேண்டாம் என பஞ்சாயத்து தலைவர்களுக்கு உரிய அறிவுறுத்தல்களை வழங்குமாறு மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.

Leave a Reply

Right Menu Icon