--- --:--:-- --

2 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போன நபர் எலும்புக் கூடாக கண்டெடுப்பு..!

2

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போனதாக தேடப்பட்ட நபர் அவர் வசித்து வந்த வீட்டில் எலும்புக் கூடாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

அமைந்தகரை ரயில்வே காலனியை சேர்ந்த ரமேஷ் என்பவர் ஓட்டுனராக பணியாற்றி வந்தார். திருமணமாகாத இவர் கடந்த 2019
ஆம் ஆண்டு காணாமல் போன நிலையில் அதன் பிறகு ரமேஷ் குறித்து எந்த தகவலும் தெரியவில்லை.

 

இந்நிலையில் உறவினரை சந்திக்க அமைந்தகரைக்கு வந்த சகோதரர் அவரின் வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு குப்பைகள் மண்டிக் கிடப்பதைகண்டு சுத்தம் செய்ய முயன்றபோது ரமேஷ் எலும்புக்கூடாக கிடப்பதை கண்டு அவர் அதிர்ச்சி அடைந்தார்.

 

இது குறித்த புகாரில் விசாரணை மேற்கொண்டு வரும் காவலர்கள் கண்டெடுக்கப்பட்ட எலும்பு கூட்டை தடயவியல் பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

 

ரமேஷ் உயிரிழந்தது எப்படி? அவர் கொலை செய்யப்பட்டாரா? வீட்டில் ரமேஷ் உயிரிழந்தது அருகில் இருந்தவர்களுக்கு எப்படி தெரியாமல் போனது என்று பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon