நடிகர் சிம்பு நடிக்கும் படத்தின் பெயர் மாற்றம்..!
நடிகர் சிலம்பரசன் அடுத்து நடிக்கும் படத்திற்கான பெயர் வெந்து தணிந்தது காடு என்று படத்தின் பெயர் மாற்றப்பட்டுள்ளது. முன்னதாக இந்த படத்திற்கு நதிகளிலே நீராடும் சூரியன் என பெயர் வைக்கப்பட்டிருந்தது.
விண்ணைத்தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா ஆகிய படங்களை தொடர்ந்து கௌதம் வாசுதேவ மேனன் இயக்கும் படத்தில் நடிக்கிறார். இந்த படத்திற்கான அறிவிப்பு சில மாதங்களுக்கு முன்பு வெளியானது.
இந்த படத்தின் பெயர் மாற்றத்திற்கான அறிவிப்பு இன்று அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.






