--- --:--:-- --

ஓமை கடவுளே திரைப்படம் தெலுங்கில் ரீமேக்..!

3

தமிழில் சூப்பர் ஹிட் அடித்த ஓ மை கடவுளே திரைப்படத்தின் தெலுங்கு ரீமேக்கில், அல்லு அர்ஜுன் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் அசோக் செல்வன் நடிப்பில் தமிழில் வெளியான ஓ மை கடவுளே படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.

 

முக்கோண காதல் கதையை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கிய இந்த படம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் வெகுவாக ஈர்த்தது. இந்த நிலையில் இந்த படத்தை தமிழில் இயக்கியவரே தெலுங்கிலும் ரீமேக் செய்து இயக்க உள்ளார்.

 

அல்லு அர்ஜூன் நடிகர் விஜய் சேதுபதி கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon