திருப்பூரில் இன்று முதல் கூடுதலாக புதிய கட்டுப்பாடுகள்..!
திருப்பூர் மாவட்டத்தில் கொரொனா பரவலை தடுக்கும் விதமாக இன்று முதல் கூடுதலாக புதிய கட்டுப்பாடுகளை விதித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
பால் மற்றும் மருந்தகம் தவிர மளிகை கடைகள் காய்கறி கடைகள் உள்ளிட்ட அனைத்து கடைகளும் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே செயல்பட வேண்டும் எனக் கூறியுள்ளார். சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் சூப்பர் மார்க்கெட்டுகள் வணிக வளாகங்களுக்கு தடை விதித்து உத்தரவிட்டுள்ளார்.
கேரளாவில் இருந்து வருபவர்கள் பரிசோதனை சான்றிதழ் அல்லது இரண்டு தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும் இல்லை எனில் பரிசோதனை செய்யப்படும் எனவும் கூறினார்.
மேலும் திருப்பூர் மாவட்டத்தில் அனைத்து டாஸ்மாக் கடைகளும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே செயல்படும் என்றும் ஆட்சியர் தெரிவித்துள்ளார்.







