கோவையில் இன்று முதல் புதிய கட்டுப்பாடுகள் அமல்..!
கோவையில் கொரொனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் மாவட்டம் முழுவதும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. கடைகள் மாலை 5 மணி வரை மட்டுமே திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளனர். அழைத்து சுற்றுலாத் தலங்களிலும் பொதுமக்களுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.
கொரொனா பரவலை கட்டுப்படுத்த மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுப்பதற்கு முதலமைச்சர் மு க ஸ்டாலின் அனுமதி அளித்திருந்தார். அதன்படி இன்று முதல் கோவை மாவட்டத்தில் பல்வேறு புதிய கட்டுப்பாடுகளை விதித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி அனைத்து மளிகை கடைகள், காய்கறி கடைகள், பேக்கரிகள் மற்றும் டீ கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மீன் மற்றும் இறைச்சி கடைகள் காலை 6 மணி முதல் மதியம் 2 மணி வரை இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
டாஸ்மாக் மதுபான கடைகள் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே இயங்கும் என ஆட்சியர் கூறியுள்ளார். அனைத்து சுற்றுலா தளங்கள் மற்றும் அருங்காட்சியகங்களில் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் வருகைக்கு தடை விதிக்கப்படுகிறது.
பூங்காக்கள் ஞாயிற்றுக்கிழமை மூடப்படும் என்று மாவட்டத்தில் உள்ள அனைத்து மால்கள் மற்றும் பன்னாட்டு வணிக வளாகங்கள் ஞாயிற்றுக்கிழமை இயங்கவும் தடைவிதிக்கப்பட்டுள்ளது. பொள்ளாச்சி மாட்டு சந்தை ஆகஸ்ட்4-ம் தேதி முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது.






