--- --:--:-- --

சிபிஎஸ்சி 9 ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான பாடத் திட்டங்கள் குறைப்பு..!

3

நாடு முழுவதும் சிபிஎஸ்சி ஒன்பதாம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான பாடத் திட்டங்கள் குறைக்கப்பட்டுள்ளன. கொரொனா இரண்டாவது அலையால் நாடு முழுவதும் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன.

 

இதனால் சிபிஎஸ்சி மாணவர்களுக்கான பள்ளி பாட திட்டங்கள் குறைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி சிபிஎஸ்இ ஒன்பதாம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பாடங்கள் குறைக்கப்பட்டுள்ளன.

 

குறைந்த பாடத்திட்டங்கள், மதிப்பெண் கணக்கீடு ஆகியவை குறித்து இணையதளத்தில் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நடப்பு கல்வி ஆண்டில் மட்டும் இந்த பாடத்திட்டம் அமல்படுத்தப்படும் என்று மத்திய கல்வி வாரியம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

Leave a Reply

Right Menu Icon