--- --:--:-- --

மூன்றாவது கொரொனா அலை – நீட் நுழைவுத் தேர்வை ஒத்திவைக்கும் திட்டம் இல்லை..!

4

மூன்றாவது கொரொனா அலை அச்சுறுத்தல் காரணமாக நீட் மற்றும் மற்ற நுழைவு தேர்வுகள் ஒத்திவைக்கும் திட்டம் இல்லை என ஒன்றிய இணை அமைச்சர் பிரவீன் பாரதி தெரிவித்துள்ளார்.

 

மக்களவையில் திமுக எம்பி தமிழச்சி தங்கபாண்டியன் எழுப்பிய கேள்விக்கு பிரவீன் பாரதி எழுத்துப்பூர்வமாக பதில் அளித்துள்ளார். அதில் நாடு முழுவதும் மருத்துவ படிப்புகளுக்கு செப்டம்பர் 12ஆம் நாள் நுழைவுத்தேர்வு நடத்தப்படுகிறது.

 

கலை மற்றும் அறிவியல் படிப்புக்கு நுழைவு தேர்வு நடத்துவது பற்றி மாநில அரசு தான் முடிவு செய்ய வேண்டும் என்றால் மேலும் நீட்தேர்வு எக்காரணத்தைக் கொண்டும் ஒத்தி வைக்கப்படாது என திட்டவட்டமாக குறிப்பிட்டவர் நீட் தேர்வு திட்டமிட்டபடி நடைபெறும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

 

 

Leave a Reply

Right Menu Icon