--- --:--:-- --

தனியார் மருத்துவமனைகளிலும் இலவச தடுப்பூசியா..?

11

மிழகத்தில் தனியார் மருத்துவமனைகளிலும் இலவச தடுப்பூசி கிடைப்பதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

 

சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் தனியார் மருத்துவமனைகளுக்கு கொரோனா தடுப்பூசி ஒதுக்கீடு மற்றும் பெருநிறுவனங்களின் சிஎஸ்ஆர் நிதி உதவியுடன் இலவச தடுப்பூசி வழங்கும் திட்டத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வருவது குறித்த கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.

 

அப்போது மா சுப்பிரமணியன் தமிழகத்தில் தனியார் மருத்துவமனைகளிலும் இலவச தடுப்பூசி என்ற நிலை வரவேண்டும் என்பதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்தார். திமுக ஆக்சிஜன் பற்றாக்குறையால் யாரும் உயிரிழக்கவில்லை என்று தான் கூறியதாக விளக்கமளித்தார்.

Leave a Reply

Right Menu Icon