கார் ஓட்டுனரை மது போதையில் தாக்கிய உதவி காவல் ஆய்வாளர்..!
சென்னையில் கார் ஓட்டுனரை மது போதையில் தாக்கிய உதவி காவல் ஆய்வாளர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்.ளது. கார் ஓட்டுநரான மயில் முருகன் என்பவர் எழும்பூர் ஆல்பர்ட் தியேட்டர் அருகே காரை நிறுத்தியுள்ளார்.
அப்போது ரோந்து பணியில் ஈடுபட்ட உதவி காவல் ஆய்வாளர் காரை நிறுத்த கூடாது என கூறியுள்ளார். இதனால் இருவரும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட போது திடீரென மயில் முருகனை உதவி காவல் ஆய்வாளர் அடித்துள்ளார்.
காயமடைந்தவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர் மது போதையில் தன்னை தாக்கியதாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். உதவி ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கால் டாக்சி ஓட்டுனர்கள் எழும்பூர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர்.
இதையடுத்து மருத்துவ சோதனையில் உதவி காவல் ஆய்வாளர் மது போதையில் இருப்பது தெரியவந்ததை அடுத்து அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.







