இனி நமக்கு சைக்கிள் தான் சரிபட்டு வரும் – சன்னிலியோன்
பெட்ரோல் விலை 100 ரூபாயை கடந்துள்ள நிலையில் சைக்கிள் தான் இனி நமக்கு சரிபட்டு வரும் என நடிகை சன்னி லியோன் டுவிட்டரில் தெரிவித்துள்ளார். ஒன்றிய அரசு விமர்சித்து சன்னி லியோன் இப்படி பதிவிட்டு இருப்பதாக நெட்டிசன்கள் கூறிவருகின்றனர்.
பெட்ரோல், டீசல் விலை உயர்வை வைத்து ஏகப்பட்ட மீம்ஸ்கள் வலம் வருகின்றன. இனி பெட்ரோல் போட லோன் எடுக்க வேண்டும் என்ற நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். சில மாதங்களுக்கு முன் பெட்ரோல் விலை உயர்வை கண்டித்ததால் வாக்கு சாவடிக்கு சைக்கிளில் வந்தார் என கூறப்பட்டது.
இது போல் சன்னி லியோனும் பெட்ரோல் விலை 100 ரூபாயை கடந்ததால் சைக்கிள் தானே இனி சரிப்பட்டு வரும் என கூறியுள்ளார்.





